உள்ளூர் செய்திகள்

பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி

Published On 2023-09-30 07:13 GMT   |   Update On 2023-09-30 07:13 GMT
  • சிறுவர்-சிறுமிகள் கொண்டாட்டம்
  • வெளிநாடுகளில் அதிக வரவேற்பு பெற்றது

நாகர்கோவில் :

வெளிநாடுகளில் பொருட் காட்சிகள் எக்ஸ்போ என்ற பெயரில் பிரம்மாண்டமாக நடைபெறும். துபாய் போன்ற நாடுகளில் ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி போன்றவை பார்வையாளர்களை குதூக லப்படுத்தும். இதைப் போன்ற பிரம்மாண்ட ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி தமிழ்நாட்டிலும் இப்போது நடத்தப்பட்டு வருவது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

மதுரையைச் சேர்ந்த எம்.கே .சி. என்ற நிறுவனம் ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியை கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. இக்கண்காட்சியை கன்னியாகுமரி மாவட்ட மக்களும் கண்டுகளிக்கும் வகையில் எம்.கே .சி. நிறுவனம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல் நாகர்கோவில் மாநகராட்சி அனாதை மடம் மைதானத்தில் நடத்தி வருகிறது.

ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி 200 மீட்டர் நீளத்தில் கடல் நீருக்குள் குகை போல் செட் அமைக்கப்பட்டு அதில் 50 வகையான விதவிதமான கடல் மீன்கள் சுற்றி வருவது பார்ப்பதற்கு பரவசம் தருகிறது. இந்த குகை முழுவதும் ஏசி வசதியும் செய்யப்பட்டிருப்பது சிறப்பு.

கண்காட்சி அரங்கிற்குள் டிக்கெட் எடுத்து விட்டு சுறா மீன் வாய் நுழைவு வாயிலில் நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது செல்பி பாயிண்ட். 50-க்கும் மேற்பட்ட செல்பி பாயிண்டுகளில் பார்வையாளர்கள் நின்று படம் எடுத்துக் கொள்கி றார்கள். அதன் பிறகு நம்மை வரவேற்பது பரவ சம் ஏற்படுத்தும் குகை கடல் மீன்கள் கண்காட்சி.

கடலுக்குள் குகை போல் உள்ள ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் தலைக்கு மேலேயும், நமக்கு இருபுறமும் கடலுக்குள் சுற்றி வரும் மீன்கள் கூட்டத்தை போல தண்ணீருக்குள்சுற்றி வரும் மீன்கள் கூட்டத்தை பார்த்து ரசித்தபடி செல்வதற்கு நமக்கு 30 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.

குழந்தைகள் துள்ளி திரியும் மீன்களை தொட்டு ரசித்தபடி பார்த்து மகிழ்ந்து குகையை விட்டு வெளியே வந்தால் மைதானத்திற்குள் பறந்து விரிந்து இருக்கும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நம்மை வரவேற்கிறது. வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கே கிடைக்கின்றன.

ஆங்காங்கே டெல்லி அப்பளம், பஞ்சுமிட்டாய், பாப்கார்ன், குலுக்கி சர்பத், பானி பூரி கடைகள், உணவு வகைகள் ஆகியவற்றை வாங்கி ருசித்தபடி கடந்து சென்றால் ராட்டினங்கள். குழந்தைகளுக்கான டோரா டோரா ராட்டி னங்கள், ஹனி டியூ ராட்டினம், பார்வை யாளர்களை விண்ணுக்கும் மண்ணுக்கும் கொண்டு செல்லும் அனுபவத்தை தரும் ஜெயண்ட் வீல் ராட்டினம், முன்னும் பின்னும் சுழன்று அடிக்கும் சுனாமி எனப் படும் ராட்டினம், ெரயில் ராட்டினம் என பல வகையான ராட்டினங்கள் குழந்தைகளையும், பெரி யவர்களையும் குதூகலப் படுத்துகின்றன.

இவற்றை கடந்து வந்தால் பேய் வீடு அரங்கமும், 3டி அரங்கமும் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. மேலும் குழந்தைகளுக்கு போட்டிங், கார் டிரைவிங் என பொருட்காட்சியில் அனைத்தும் நம்மை 5 மணி நேரம் மறக்கடிக்க செய்கின்றன. ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியை நடத்துவது மிகப் பெரிய சவாலான விஷயம் என்கின்றனர் நிர்வாகிகள். குகைக்கடல் கண்காட்சியில் மீன்கள் மிதக்க 5ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. இதை குமரி கடலில் இருந்து லாரியில் கொண்டு வந்து நிரப்பி பயன்படுத்துகிறார்கள்.

இந்த ஆழ்கடல் குகை கண்காட்சியில் உள்ள மீன்கள், நான்வெஜ் சாப்பிடு பவை. அவற்றை பராமரிக்க 5 ஊழியர்கள் வரை பயன் படுத்தப்படுகிறார்கள்.

Tags:    

Similar News