தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பை மறுசீரமைக்க ரூ.116 கோடி ஒதுக்கீடு
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
- தொய்வின்றி பணிகள் நடைபெற ஆவண செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை
கன்னியாகுமரி:
தமிழக காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது :-
தேங்காப்பட்ட ணம் துறைமுக கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்ய சட்டமன்றத்தி லும், தொடர்ந்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும், மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியதன் அடிப்படையில் துறைமுக கட்டமைப்பை சீரமைக்க மூன்று கட்டங்களாக ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கனவே அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு பக்கமுள்ள பிரதான அலைத்தடுப்பு சுவரை 200 மீட்டர் நீட்டிப்பு செய்யவும், சேதமடைந்துள்ள முகப்பு பகுதியை சீரமைக்கவும் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.77 கோடி நிதி ஒதுக்கி அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு பிப்ரவரியில் – தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.60 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
2021 அக்டோபரில் நடைபெற்ற 11 –வது மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில், மத்திய நீர் ஆற்றல் ஆராய்ச்சி நிலையத்தால் அளிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை யின்படி துறைமுக வடிவமைப்பு மற்றும் அலை அமைதிக்கான கணிதவியல் ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிரதான அலை தடுப்பு சுவரை 633 மீட்டர் நீட்டிப்பு செய்ய வேண்டும் என பரிந்து ரைக்கப்பட்டது.அதன் மதிப்பீடு ரூ.193 கோடி என தெரி விக்கப்பட்டது.
அதன்பிறகு நடைபெற்ற 13-வது மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் துறைமுக கட்டமைப்பை மறு சீரமைக்க 60 கோடி மற்றும் 193 கோடி என மொத்தம் 253 கோடிக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் மீன்பிடி துறைமுக கட்டமைப்பை மறு சீரமைக்க தற்போது தமிழக அரசால் கடந்த 13-ந் தேதி ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணி ஆணை வழங்கி தொய்வின்றி பணிகள் நடைபெற ஆவண செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
அரசாணை பிறப் பித்ததற்காக தமிழக முதல்வர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆகியோருக்கும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.