மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
- மேயர் மகேஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்
- மாநில அயலக அணி துணை செயலாளர் ஏற்பாட்டில் நடந்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவல கத்தில் மாநில அயலக அணி துணை செயலாளர் பாபு வினிபிரட் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சி யினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில அயலக அணி துணை செயலாளர் பாபு வினிபிரட் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரகுமார், பி.எஸ்.பி. சந்திரா மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மாற்று கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க. வில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொன் னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு 6-வது முறையாக பொறுப்பேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப் பான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி பொறுப் பேற்ற 2 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் கடந்த 27 ஆண்டுகளாக கட்சியில் உழைத்து இந்த பொறுப் பிற்கு வந்துள் ளேன். மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டேன். மாநக ராட்சி புதிய அலுவலக கட்டிட திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மாநகராட்சி மேயர் இருக்கை யில் என்னை அமர வைத்து அழகு பார்த்தார். ஏழைத் தொண்டராகிய என்னை இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்துள்ளார். நீங்களும் தி.மு.க.விற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் தி.மு.க. உங்கள் பின்னால் நிற்கும். இதை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண் டும். கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப் புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.