குடிபோதை தகராறில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி
- போலீசார் தகராறில் ஈடுபட்ட வாலிபர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
- வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தபோது விபத்து
நாகர்கோவில்:
குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முத்தையன் (வயது 63). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தார்
பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு முத்தையன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முத்தையனை அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (27) தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது முத்தையனிடம் ஸ்ரீஜித் குடிக்க பணம் கேட்டார்.முத்தையன் பணம் கொடுக்காததால் அவரை பிடித்து ஸ்ரீஜித் கிழே தள்ளியுள்ளார்.இதில் முத்தையன் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் முத்தையன் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முத்தையன் உயிருக்கு போராடினார்.இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முத்தையனை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். இதுகுறித்து முத்தையன் மகன் சுஜின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீஜித் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.