உள்ளூர் செய்திகள்

பாறையில் ஏறி நின்று இயற்கை காட்சிகளை ரசித்த போது கன்னியாகுமரி கடலில் தவறி விழுந்து முதியவர்

Published On 2023-05-17 09:05 GMT   |   Update On 2023-05-17 09:05 GMT
  • தீயணைக்கும் படையினர் உயிருடன் மீட்டனர்
  • கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி நாச்சி யார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (55).இவர் நேற்று கன்னியா குமரி கடற்கரைச் சாலை அருகேயுள்ள வியூ டவர் பாறையில் நின்று கொண்டி ருந்தார்.

அப்போது அவர் திடீ ரென கடலில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தார். இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், தலைமை காவலர் சுபாஷ், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் துரைசிங் ஆகி யோர் அடங்கிய போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதேபோல் தீயணைப்பு நிலைய போலீசாரும் பாது காப்பு கருதி வரவழைக்கப்ப ட்டனர்.தொடர்ந்து கடலில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்த ஜெயக்குமார் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

அவரை போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து ஜெயக்குமா ரின் உறவினர்க ளுக்கு போலீசார் தகவல் தெரி வித்தனர்.சிகிச்சைக்கு பின் அவர் பாதுகாப்பாக வீடு திரும்பினார்.

ஜெயக்குமாரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News