உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

Published On 2023-07-27 07:46 GMT   |   Update On 2023-07-27 07:46 GMT
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், முளைப் பாத்தி ஊர்வலத்தை தொடங்கினர்
  • மறுநாள் மஞ்சள் நீராடுதல் திருஷ்டி பூஜை உற்சவ மூர்த்திக்கு நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றது

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஆலயத்தில் முப்பந்தல் ஸ்ரீ ஆலமுடு அம்மன் கோவில் ஒன்றா கும். இங்கு ஆடி மாத கொடையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் பால்குட ஊர்வலமும், பூக்குழி திருவிழாவும் நடந்தது.

ஆரல்வாய்மொழி வடக்கூர் குட்டி குளத்தான் கரை இசக்கியம்மன் ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர் குடம், முளைப் பாத்தி ஊர்வலத்தை தொடங்கினர். ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின்பு ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு பூஜை, நள்ளிரவு பக்தர்கள் பரவசத்தோடு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு ஊட்டுப்படைப்பு, அன்னப்படைப்பு நடந்தது. மறுநாள் மஞ்சள் நீராடுதல் திருஷ்டி பூஜை உற்சவ மூர்த்திக்கு நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றது. கொடை விழா ஏற்பாடுகளை ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் டாக்டர் அருணாச்சலம் மற்றும் பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News