குலசேகரம் அருகே ஆற்றில் மூழ்கிய பெண் 24 மணி நேரத்தில் மீட்ட தீயணைப்பு வீரருக்கு விருது
- 24 மணி நேரத்திற்கு பின்னர் மறுநாள் அவர் திக்குறிச்சி பகுதியில் ஆற்றிலிருந்து தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.
- நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே பாரதப் பள்ளியைச் சேர்ந்தவர் புஷ்பபாய் (வயது 60) இவர் கடந்த 10 -ந்தேதி இப்பகுதி வழியாகப் பாயும் கோதையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்துச் செல் லப்பட்டார்.
இந்நிலையில் 24 மணி நேரத்திற்கு பின்னர் மறுநாள் அவர் திக்குறிச்சி பகுதியில் ஆற்றிலிருந்து தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.
இதை யடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் (போக்கு வரத்து) செல்வ முருகேசன், தீ அணைப்பாளர்கள் ஜெக தீஸ், கோட்டை மணி, நிஜல்சன், மாரி செல்வம், கபில் சிங், பைஜூ மற்றும் படகு ஓட்டுனர் சுஜின் ஆகியோருக்கு நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் நா. விஜயகுமார் அங்கீகார விருது வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், மாவட்ட உதவி தீ அணைப்பு அலுவலர் இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்றனர்.