உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் களை கட்டிய கடற்கரைகள்

Published On 2022-12-26 07:51 GMT   |   Update On 2022-12-26 07:51 GMT
  • குளச்சல் கடற்கரை பகுதியிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வட்டகோட்டை, சங்குத்துறை பீச்,கணபதிபுரம்பீச் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது
  • சொத்தவிளை கடற்கரையில் பொதுமக்களை படகுகளில் நடுக்கடலில் சுற்றுலா அழைத்துச் சென்றது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரிக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் ஏராளமானோர் வந்து கடற்கரையில் குவிந்தி ருந்தனர். மாலையிலும் கட்டுக் கடங்காத கூட்டம் இருந்தது.

சூரியன் மறைவதை பார்க்க சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

குளச்சல் கடற்கரை பகுதியிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வட்டகோட்டை, சங்குத்துறை பீச்,கணபதிபுரம்பீச் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. திற்பரப்பு அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

சொத்தவிளை கடற்கரை யிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்தோடு அங்கு வந்து இருந்தனர். கடற்கரையில் உள்ள மணலில் குழந்தை கள் விளையாடி மகிழ்ந்த னர். கடலில் ராட்சத அலை எழும்பியதையும் பொருட் படுத்தாமல் எந்த அச்சமும் இன்றி பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இது ஒரு புறம் இருக்க சொத்தவிளை கடற்கரையில் பொதுமக்களை படகுகளில் நடுக்கடலில் சுற்றுலா அழைத்துச் சென்றது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.குமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இதனால் மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லவில்லை.

இந்தநிலையில் சொத்த விளை கடற்கரையில் இருந்து 3 படகுகளில் பொது மக்களை சுற்றுலா வாக நடுக்கடலுக்கு அழைத்துச் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்தப் படகில் பொது மக்கள் குடும்பத்தோடு பயணம் செய்தனர். ஆபத்தான முறையில் படகில் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி அதிகமான பொது மக்களை ஏற்றி சென்றனர்.அந்தி சாயும் பொழுது வரை பொதுமக்களை கடலுக்குள் அழைத்து சென்றது வியப்பை ஏற்படுத்தியது.

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலை யில் சொத்தவிளை கடற்கரையில் எந்த ஒரு போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள்.

Tags:    

Similar News