உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்ற 23 பேர் மீது வழக்கு

Published On 2022-10-03 07:31 GMT   |   Update On 2022-10-03 07:31 GMT
  • 225 மதுபாட்டில்கள் பறிமுதல்
  • காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.

நாகர்கோவில்:

காந்தி ஜெயந்தியொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.இதையடுத்து அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி நாகர்கோவில் தக்கலை குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 23 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 225 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஆசாரிப்பள்ளம் போலீ சார் வசந்தம் நகர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு அனுமதியின்றி மது விற்ற செல்வக்குமார் என்பவரை கைது செய்தனர் .அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களும் ரூ. 4400 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கோட்டார் போலீசார் வட்டவிளை பகுதியில் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த கண்ணன் என்பவரையும் தாமஸ் என்பவரையும் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பார்வதிபுரம் பகுதியில் மதுவிற்ற காந்திமதி நாதன் என்பவரை போலீசார் கைது செய்தவுடன் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் தக்கலை மார்த்தாண்டம் இரணியல் மற்றும் மதுவிலக்கு போலீஸ் நிலையங்களிலும் மது விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News