உள்ளூர் செய்திகள்

கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ரூ. 2 கோடி செலவில் கழிவு நீர் ஓடை பணியை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்

Published On 2022-09-08 08:54 GMT   |   Update On 2022-09-08 08:54 GMT
  • கழிவு நீர் ஓடை சீரமைத்து அலங்கார விளக்குகள் மற்றும் சாலை விரிவாக்க பணிக்கு ரூ. 2 கோடி நிதி
  • கழிவுநீர் ஓடை அமைப்பதற்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது

நாகர்கோவில் :

நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை சீரமைத்து அலங்கார விளக்குகள் மற்றும் சாலை விரிவாக்க பணிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது.

கழிவுநீர் ஓடை அமைப்பதற்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை மேயர் மகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை துரிதமாக முடிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது என்ஜீனியர் பாலசுப்பிர மணியன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், மாநகர செயலா ளர் ஆனந்த், கவுன்சிலர் பால் அகியா மற்றும் நிர்வாகிகள் ஜீவா, உசேன் உட்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News