உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை

Published On 2023-09-23 07:37 GMT   |   Update On 2023-09-23 07:37 GMT
  • கலெக்டர் ஸ்ரீதர் இன்று தொடங்கி வைத்தார்
  • தீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனை

நாகர்கோவில் :

காலத்திற்கேற்ற வகை யில் புதிய உத்திகளைக் கையாண்டு பல வடிவமை ப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனைதீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது.

குமரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் குமரி விற்பனை நிலையத்தில் தீபாவளி-2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனை இன்று காலை தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

இந்த ஆண்டு ரூ.6 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார். மேலும் சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு புடவைகள், திருப்பு வனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கை வண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள் பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளைசெட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நாகர்கோ வில் குமரி விற்பனை நிலையம், தக்கலை விற்பனை நிலையம், மார்த்தாண்டம் விற்பனை நிலையம். கன்னியா குமரி விற்பனை நிலையம், மார்த்தாண்டம் வளாக விற்பனை குழு ஆகி யவை மூலம் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ரூ.2.83 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

தற்போது இந்த ஆண்டிற்கு ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் "மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர் களிடமிருந்து பெறப்பட்டு 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி 12 மாதம் முடிவடைந்தவுடன் 30 சதவீதம் தள்ளுபடியுடன் மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

விழாவில் தலைமை அலுவலக முதன்மை பொது மேலாளர் அலோக் பாப்லே, கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டலமேலாளர், ராஜேஷ்குமார், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை குமரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்பத்மராஜ் செய்திருந்தார்.

Tags:    

Similar News