உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் நீதிபதிகள்,சட்டகல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சமரச விழிப்புணர்வு பேரணி

Published On 2023-04-12 06:47 GMT   |   Update On 2023-04-12 07:40 GMT
  • மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்
  • மாணவ-மாணவிகள் சமரசம் மையம் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம்

கன்னியாகுமரி :

சென்னை உயர்நீதி மன்றத்தால் தமிழ்நாடு சமரசமையம் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகிறது.வழக்குத்தரப்பினர்கள் தம் எதிர்தரப்பினருடன் பேசி சமரசம் செய்து கொள்ள ஏதுவாக நீதிமன்றம் சமரச மையத்துக்கு வழக்குகளை அனுப்புகிறது.

இங்கு நன்கு பயிற்சிஅளிக்கப்பட்ட சமரசர்கள் வழக்குத்தரப்பினர்கள் தங்கள் வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள உதவுவார்கள். நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்கு தரப்பினர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்ததேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தனி அறைகள்,காத்திருக்க இடவசதி போன்றவை சமரச மையத்தில் உள்ளன. நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நாள் முழுவதும் இந்த சமரசம் மையம் இயங்கும்.குமரி மாவட்டநீதிமன்றத்தின் சமரச மையம் சார்பில் சமரசம் மையம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த "சமரசம் நாடுவீர்" என்ற தலைப்பில் சமரச விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரியில் நேற்று மாலை நடந்தது. கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து இந்த பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மாயகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தப்பேரணியில் முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், 1-வது கூடுதல் சார்பு நீதிபதி முருகன், 2-வது கூடுதல் சார்பு நீதிபதி அசன்முகமது, சமரசம் மையத்தின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான நம்பிராஜன்,சமரச மையத்தின் வழக்கறிஞர்கள் ஜெயராணி, எம்.இ.அப்பன், துரைராஜ், சுபாஷ்,ஸ்டீபன்,உமாசங்கர், சரத்,ஜெகன், சுசீலாதேவி, சுஜாதா மற்றும் படந்தாலுமூடு முகில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்ட னர். கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து புறப்பட் ட இந்த பேரணி மெயின் ரோடு, முக்கோண பூங்கா சந்திப்பு,காந்தி மண்டப பஜார் வழியாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு சென்று நிறைவடைந்தது. வழி நெடுகிலும் சுற்றுலா பயணிகள், மற்றும் கடை வியாபாரிகளிடம் நீதிபதிகள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் சமரசம் மையம் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

Tags:    

Similar News