கண்டன்விளை குழந்தை ஏசுவின் தெரேசாள் ஆலயத்தில் தொடர் ஜெபமாலை
- 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலிக்கிறது
- இந்த ஆலயம் 100-வது ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது.
கன்னியாகுமரி :
உலகிலேயே புனிதராக அறிவிக்கும் முன்பே சிறுமலர் தெரேசாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம்.
இந்த ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப் பட்டது. 1925 மே 17-ல் சிறுமலர் தெரேசா புனித ராக அறிவிக்கப்பட்டார். புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த 2 சகோதரிகளால் 1931-ம் ஆண்டு கண்டன்விளை ஆலயத்திற்கு தரப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. புனிதையின் பேரருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. வருகிற 2024 ஏப்ரல் மாதம் இந்த ஆலயம் 100-வது ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது.
இந்த நிலையில் கண்டன் விளை குழந்தை இயேசு வின் புனித தெரேசா ஆலயத்தில் 100 தொடர் ஜெபமாலை செய்து இறை வனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நாளை (14-ந்தேதி) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
நாளை காலை 7 மணி முதல் 15-ந்தேதி மாலை 7 மணி வரை நடக்கும் இந்த ஜெபமாலை ஜெபம் நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜெபமாலை நிகழ்வை கண்டன்விளை கிளை பங்குகளான சித்தன் தோப்பு, பண்டாரவிளை, இரணியல் மற்றும் அன்பி யங்கள், சங்கங்கள், பக்தசபை இயக்கங்கள், திருத்தூது கழகங்கள், கண்டன்விளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு அருட்பணியாளர்கள் ஆகியோர் இணைந்து சிறப்பிக்கின்றனர்.
தொடர் ஜெபமாலை முடிவில் 15-ந்தேதி மாலை 7 மணிக்கு காரங்காடு வட்டார முதல்வரும் கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாயஜஸ்டஸ் தலைமை யில் திருப்பலி நடைபெறுகிறது