உள்ளூர் செய்திகள்

ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்ததை கண்டித்து நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-18 06:55 GMT   |   Update On 2023-06-18 08:51 GMT
  • குமரியில் கடைமடை பகுதிக்கு நீர் செல்லாத நிலையில் இருக்கிறது
  • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிவிப்பு

நாகர்கோவில்:

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட் டத்தில் கன்னிப் பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டு 15 நாட்கள் கடந்த பின்பும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. அணை திறப்பதற்கு முன்பாகவே கால்வாய்களை தூர்வார வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும், கால்வாய்கள் தூர்வாரப்பட வில்லை. மேலும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும். மேலும் பழையாற்றின் கரையிலுள்ள மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு இருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட் டத்தில் கால்வாய்களை தூர்வாருவதற்கு ரூ.5 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடுகள் இருக்கிறதே தவிர நிலையான தீர்வு காணப்படவில்லை. இதனால் இயற்கை செல்வங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. தண்ணீர் கடைமடைக்கு செல்லாததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி பயிரிட முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து ராதாபுரம் கால்வாயில் கடந்த 16-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை தினசரி வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு ஆணையிட்டு, அழகப்பபுரம் அருகே உள்ள திலநகர் ஊரில் இருந்து பிரிந்து செல்லும் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடைமடைகளுக்கு தண்ணீர் செல்லாத நிலையில், இருக்கின்ற தண்ணீரை ராதாபுரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. எனவே குமரி மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கடைமடைகளுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் தண்ணீர் கிடைப்பதற்கு கால்வாய்களை முறையாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி இதுபோன்ற உரிய நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்லவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் சரி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலனை பாதுகாக்க இதனை கண்டித்து நாகர்கோவில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள், கட்சி நிர்வா கிகள் பலர் கலந்து கொள் கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News