உள்ளூர் செய்திகள் (District)

திற்பரப்பு பேரூராட்சி மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரம் விநியோகம்

Published On 2022-06-05 10:02 GMT   |   Update On 2022-06-05 10:02 GMT
  • தமிழக அரசு அறிவித்த உத்தரவுபடி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை பயன்படுத்த கூடாது.
  • திற்பரப்பு அருவி அருகில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை படுத்தினார்கள்.

கன்னியாகுமரி:

தமிழக அரசு அறிவித்த உத்தரவுபடி அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களை பயன்படுத்த கூடாது. அனைவரும் மஞ்ச பையை தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி திற்பரப்பு பேரூராட்சி மூலம் திற்பரப்பு அருவி அருகில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி அந்த பகுதி முழுவதும் தூய்மை படுத்தினார்கள். அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் அந்த பகுதியில் உள்ள கடை நடத்தும் வியாபாரிகளிடமும்,

பொதுமக்களிடமும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் சுகாதார சீர் கேடுகள் போன்றவற்றை எடுத்து கூறினார்கள் அனை வரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்று பொருள்களை பயன்படுத்த வேண்டும் தமிழக அரசு அறிமுகபடுத்திய மஞ்ச பை திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பெத்ராஜ், தலைவர் பொன் ரவி, துணைத் தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு உறுப்பினர் கிருஷ்ணவேணி, பேருராட்சி தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News