உள்ளூர் செய்திகள்

மக்கள் பயன்பெறும் திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.அரசின் சாதனை - அகஸ்தீஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2022-09-19 06:42 GMT   |   Update On 2022-09-19 06:42 GMT
  • உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு பாராட்டு கூட்டம்
  • தி.மு.க. ஆட்சியில்எந்த கிராமத்தி லும் அடிப்படை வசதி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை

கன்னியாகுமரி :

அகஸ்தீஸ்வரம் பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு பாராட்டு கூட்டம் அகஸ்தீஸ்வரம் பிள்ளை யார் கோவில்  எதிரில் உள்ள மைதானத்தில் நடந்தது.

பேரூர் செயலாளர் சிவபாலன்தலைமை தாங்கினார்.அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம், அவைத்தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் பாலமுருகன் தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உ ள்ளாட்சி தேர்தலில்அ.தி.மு.க . சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதற்கு உழைத்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரி வித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஏழை மக்களுக்கு பயன்பட க்கூடிய திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க. ஆட்சியின் கடந்த 1 ½ ஆண்டு கால சாதனையாகும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

வருகிறபாராளுமன்ற தேர்தலில்பா.ஜ.க.வுடன் கூட்டணிஅமைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு எடுக்கும்.அவ்வாறு கூட்டணி வரும்போது அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

சுற்றுலா பயணிகள் கடலில்பயணம் செய்ய ரூ.8 கோடி செலவி ல்வாங்கப்பட்ட2 சொகுசு படகுகள் 3 ½ ஆண்டுகள்ஆன பிறகும்இதுவரை இயக்கப்படாமல்பாழாகிக் கொண்டிருக்கிறது. ரூ.68 கோடிசெலவில் பேனா நினைவு சின்னம் வைத்துஎன்ன பயன்? அ.தி.மு.க. ஆட்சியில்திட்டங்கள் நிறைவேற்றப்படாத கிராமங்களேஇல்லை என்ற நிலைஇருந்துவந்தது.

ஆனால் தி.மு.க. ஆட்சியில்எந்த கிராமத்தி லும் அடிப்படைவசதிதிட்டங்கள்நிறைவேற்றப்படவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாத கிராமங்கள் பற்றி சட்டசபையில் நான் குரல் எழுப்புவேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சிக்கு வருவது உறுதி.

வருகிற தேர்தலில் அகஸ்தீஸ்வரம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதைநிருபிக்கும் வகையில் தொண்டர்கள் இன்றிலிருந்து இரவு -பகல் பாராது அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

கூட்டத்தில்பேரூர் செய லாளர் கள்வீரபத்திரன், குமார், மனோகரன், எழிலன், மணிகண்டன், வடக்குதாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்பார்த்தசாரதி, நிர்வாகிகள் சுரேஷ் செல்லம்பிள்ளை, செல்லபெருமாள் மற்றும் அகஸ்தீஸ்வரம் பேரூர் கிளை நிர்வாகிகள், மகளிர்அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் துணைசெயலாளர் பால்துரை நன்றி கூறினார்.

Tags:    

Similar News