உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

Published On 2022-11-21 08:10 GMT   |   Update On 2022-11-21 08:10 GMT
  • சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் பெண்கள் வன்கொடுமை குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கி கூறினார்.
  • போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் மாணவர்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்

கன்னியாகுமரி:

கருங்கல் போலீஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் துண்டத்துவிளை புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் சுமார் 50 பேர் ஆசிரியையுடன் கலந்து கொண்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ் மற்றும் சோபனராஜ் ேபாலீசாரின் செயல்பாடு, காவல்துறையில் தற்போது பயன்படுத்தப்பபட்டு வரும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு கஞ்சா போன்ற போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் எடுத்து கூறி, போதைப்பொருட்களை ஒருவரும் பயன் படுத்தகூடாது என அறிவுறுத்தினார். மேலும் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் மாணவர்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்து போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் பெண்கள் வன்கொடுமை குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கி கூறினார். இவைகளை கேட்டு அறிந்த மாணவ மாணவிகள் போலீசாருக்கு நன்றி கூறினர்.

Tags:    

Similar News