உள்ளூர் செய்திகள்

5 பதவிகளுக்கு தேர்தல்

Published On 2022-07-09 08:21 GMT   |   Update On 2022-07-09 08:21 GMT
  • குமரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
  • பலத்த போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று நடந்தது.

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காற்றாடி தட்டு நடுநிலைப்பள்ளி , ஆத்திகாட்டுவிளை தொடக்கப்பள்ளியில் உள்ள 4 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடந்தது. காலையிலேயே பொதுமக்கள் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.

வாக்குப்பதிவையடுத்து வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜாக்கமங்கலம் யூனியன் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளது. அங்குள்ள அறையில் வாக்கு ப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்படுகிறது.

குருந்த ன்கோடு ஊராட்சி ஒன்றியம் 7-வது வார்டுக்கான தேர்தல் கக்கோட்டு தலை நடுநிலை ப்பள்ளி, தலக்குளம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பொதுமக்கள் காலையிலேயே வாக்கு பதிவு மையங்களுக்கு வந்தனர்.அவர்களுக்கு கொரோனா தடுப்பு எச்சரிக்கை நடவடிக்கையாக வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு கை கழுவும் திரவம் மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டடன.

தொடர்ந்து வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வாக்கா ளர்கள் அடையாள அட்டை களை காண்பித்த பிறகு வாக்கு பதிவு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.வாக்குகளை பதிவு செய்தவர்களுக்கு கையில் மை வைக்கப்பட்டது. இங்கு பதிவாகும் வாக்குகள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருதூர் குறிச்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு பிலாவிளை அரசு நடுநிலைப் பள்ளியிலும், கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு கண்ணனூர் அரசு நடுநிலை பள்ளியிலும், காட்டாதுறை கிராம ஊராட்சி 5-வது வார்டுக்கான வாக்குப்பதிவு காட்டாதுறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தது.

காலை 7 மணி முதல் வாக்குப்பதிவுகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். வாக்கு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 7 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 11 மணி நிலவரப்படி 24.8 சதவீத வாக்குகள் பதிவானது. 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

கிராம ஊராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த ஊராட்சிகளில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட உள்ள மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் வருகிற 12-ந்தேதி காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Tags:    

Similar News