நாகர்கோவிலில் முன்னாள் படை வீரர்களுக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு
- 23-ந்தேதி நடக்கிறது
- முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு வருகிற 23-ந்தேதி நடக்கிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் அன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கில் மாவட்ட உதவி இயக்குனர் வேலைவாய்ப்பு அலுவலகம், மேலாளர், மாவட்ட தொழில் மையம், மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், மேலாள், முன்னோடி வங்கி, மேலாளர், நபார்டு வங்கி, உதவி இயக்குனர், கதர் மற்றும் கிராம தொழில்கள், உதவி இயக்குனர், திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் இந்த மாவட்டத்தில் ஏற்கனவே தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுயதொழில் தொடங்கிட ஆலோசனைகளை வழங்கு கின்றனர்.
வங்கியிலிருந்து சுய தொழில் கடன்களை பெறுவதற்கும், மானியங்கள் பெறுவதற்கும் இந்த கருத்தரங்கு ஏதுவாக அமையும். சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.