உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் 12-வது தவணை தொகையை பெற விவசாயிகள் நில ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம்

Published On 2022-07-28 08:00 GMT   |   Update On 2022-07-28 08:00 GMT
  • மத்திய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.
  • கலெக்டர் அரவிந்த் தகவல்

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்கல் திட்டத்தில் வேளாண்மை இடு பொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவ ணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. இதுவரை பதிவு செய்த விவ சாயிகளுக்கு 11 தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. தற் போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே பயனாளிகளின் நில ஆவணங்கள் "தமிழ் நிலம்" இணையதளத்துடன் இணைக்கப்பட்டு சரிபார்ப்பு பணி நடைபெற்று வரு கிறது. எனவே இந்த ஊக்கத்தெகை பெற்று வரும் விவசாயிகள் அனைவரும் தாமாகவே முன்வந்து நில ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் ஆதார் நகல்) அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் வேளாண் விற்பனை, வேளாண் வணிகம் அலுவலகத்தில் காண்பித்து வருகிற 31-ந் தேதிக்கு முன்னரே சரி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் இத்திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் இத்திட்ட விவசாயிகள் அனைவரும் தங்க ளது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதோடு, பி.எம்.கிசான் வலைதளத்தில் இ-கே-ஒய்.சி. பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News