உள்ளூர் செய்திகள்

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்க ஹேக்கத்தான் வழிவகை செய்கிறது - அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

Published On 2023-05-07 07:59 GMT   |   Update On 2023-05-07 07:59 GMT
  • 2 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய சகாப்தத்தை எட்டியுள்ளது.
  • படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு படிக்க செல்வதும், ஆய்வு மேற்கொள்ளவும் வழியாக அமைகிறது.

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் மார்த்தாண்டம், இலவுவிளை பகுதியில் ஹேக்கத்தான் நிகழ்ச்சி கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

குமரி ஹேக்கத்தான் நிகழ்ச்சியின் நோக்கம் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவி கள் தற்போதைய சூழ்நிலை களில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நிகழ்வாக ஹேக்கத்தான் 2023 திகழ்ந்து வருகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் சுமார் 240 மாணவ, மாணவிகள் 48 குழுக்களாக பங்குபெற்று பல தீர்வுகளை சமர்ப்பித்துள்ளனர். இவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுகளுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய சகாப்தத்தை எட்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இளம் தலைமுறையினர் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கும் உரிய யுக்திகளை உருவாக்குவதற்கும் இந்த ஹேக்கத்தான் நிகழ்வானது பேருதவியாக உள்ளதோடு, படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு படிக்க செல்வதும், ஆய்வு மேற்கொள்ளவும் வழியாக அமைகிறது.

அதேபோன்று, வெளி நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வழிவகை செய்வதோடு, இளைஞர்கள் புதுமை படைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் ஹேக்கத் தான் நிகழ்வு வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News