உள்ளூர் செய்திகள்

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பலத்த மழை

Published On 2023-09-01 06:36 GMT   |   Update On 2023-09-01 06:36 GMT
  • கோழிப்போர்விளையில் 70.5 மில்லி மீட்டர் பதிவு
  • சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பாசன குளங்களிலும், அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தக்கலை கோழிபோர்விளை பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 70.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மாம்பழத்துறை யாறு, அடையாமடை, ஆணைக்கிடங்கு, கன்னி மார், களியல் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவி லில் மழை வெளுத்து வாங்கியது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

களியல் 1.2, கன்னிமார் 2.2, குழித்துறை 2.2, குழித்துறை 29.4, நாகர்கோவில் 22.2, தக்கலை 70.3, பாலமோர் 9.2, மாம்பழத்துறையாறு 44.2, கோழிபோர்விளை 70.5, அடையாமடை 57.2, ஆணைகிடங்கு 41.2,

அணை பகுதியில் போதுமான அளவு மழை பெய்யவில்லை.

இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.36 அடியாக இருந்தது. அணைக்கு 478 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 28.70 அடியாக உள்ளது. அணைக்கு 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 10.10 அடியாகவும், மாம்பழத்துறை யாறு நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு மாவட்டத்துக் குட்பட்ட கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் மழை கண்ணா மூச்சி காட்டி வருகிறது. இந்த பகுதிகளில் நேற்றும் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு காணப்பட்டது. ஆனால் மழை பெய்ய வில்லை. இன்று காலையில் வழக்கம்போல் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்தது.

Tags:    

Similar News