உள்ளூர் செய்திகள் (District)

குமரியில் நேற்று ஒரே நாளில் 36,245 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

Published On 2022-07-25 07:16 GMT   |   Update On 2022-07-25 07:16 GMT
  • 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • நாகர்கோவில் மாநகர பகுதியில் 3776 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. நேற்று 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 81 ஆயிரத்து 910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டது.

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் கழிந்தால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து மாவட்டம் முழுவதும் ஏராளமானவருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்து இருந்தது.

இதனால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

9 ஒன்றியங்களிலும் 410 இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செ ய்யப்பட்டது.

குமரி மாவட்ட த்தில் குருந்தன்கோடு முன்சிறை தக்கலை ஒன்றியங்களில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த தையடுத்து அந்த பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர படுத்தினர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் முன் சிறை ஒன்றி யத்தில் அதிகபட்சமாக 4854 பேருக்கு தடுப்பூசி போடப்ப ட்டுள்ளது.

தக்கலை ஒன்றியத்தில் 4852 பேருக்கும், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தில் 3972 பேருக்கும், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 4,306 பேரு க்கும் தடுப்பூசி செலுத்தப்ப ட்டுள்ளது.

திருவட்டாறு ஒன்றி யத்தில் 3448 பேருக்கும், அகஸ்தீஸ்வரத்தில் 3,245 பேருக்கும், தோவாளையில் 2204 பேருக்கும், கீள்ளியூரில் 2004 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் 3776 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இடைக்கோடு பகுதியில் 3,594 பேருக்கு என மொத்தம் நேற்று ஒரே நாளில் 36 ஆயிரத்து 245 பேருக்கு தடுப்பூசி போடப்ப ட்டுள்ளது.இதில் பூஸ்டர் தடுப்பூசியை அதிகமானோர் செலுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News