உள்ளூர் செய்திகள்

தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனை

Published On 2023-09-23 07:29 GMT   |   Update On 2023-09-23 07:29 GMT
  • பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
  • புரட்டாசி மாதம் என்பதால் திருவிழாக்கள் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது.

ஆரல்வாய்மொழி :

குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்து பூக்கள் மாவட்டம் முழுவதும் மாநிலம் முழுவதும் திருவனந்தபுரம், வேளச்சேரி வழியாக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறது.

ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர்மாட நாடார் குடியிருப்பு, காவல்கிணறு உள்ளிட்ட பகுதியில் இருந்து பிச்சி பூவும், திண்டுக்கல் கொடைரோடு, வத்தலகுண்டு, மதுரை, மானாமதுரை, கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து மல்லிகை பூ, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தியும், பட்ட ரோஷும், திருக்கண்ணங்குடி, தென்காசி, புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும் வருகிறது. அதேபோல் சேலத்தில் இருந்து அரளி, தோவாளை, ராஜாவூர், செண்பகராமன்புதூர், ராஜாவூர், மருங்கூர் ஆகிய பகுதியிலிருந்து அரளி, சம்பங்கி, கோழி கொண்டை, தாமரை, அருகம்புல் ஆகிய பூக்கள் சந்தைக்கு வந்து வியாபாரம் நடக்கிறது.

புரட்டாசி மாதம் என்பதால் விசேஷ வீடுகளில் திருவிழாக்கள் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை குறைந்தே காணப்படுகிறது.

பூச்சந்தையில் ஒரு தாமரை பூ ரூ.2-க்கும். சீசன் இல்லாததாலும் மல்லிகைப்பூ இல்லாத காரணத்தாலும் மல்லிகைப்பூ வரத்து குறைவு இதனால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையாகி வருகிறது. பிச்சிப்பூ ரூ.600 அரளி ரூ.60, கனகாம்பரம் ரூ.300, முல்லை ரூ.500 மரிக்கொழுந்து ரூ.120, மற்ற பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது. பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News