உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் கலி வேட்டை நிகழ்ச்சி

Published On 2023-03-30 07:20 GMT   |   Update On 2023-03-30 07:20 GMT
  • தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மங்கள் நடைபெறுகிறது
  • கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத 11 நாள் திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மங்கள் நடைபெற்று வருகின்றன. 8-ம் நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, உகப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பால்அன்ன தா்மம் ஆகியவை நடக்கிறது.இரவு 7 மணிக்குஅய்யா வைகுண்டசாமிபலவண்ண மலா்களால் அலங்கரிக்கப் பட்ட வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியில்இருந்துமேளதாள ங்கள் முழங்கஊா்வலமாக புறப்பட்டுஒற்றையால்வி ளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரேஉள்ள கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னதா்மம் நடக்கிறது.

9, 10-ம் நாள் திருவி ழாக்களில் இரவு 7.30 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில்எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வரும்நிகழ்ச்சிநடக்கிறது.

11-ம் நாள்திருவிழாவான வருகிறஏப்ரல்3-ந்தேதிபக ல்12மணிக்குதேரோட்டம் நடக்கிறது. மறு நாள் (4-ந்தேதி) அதிகாலை திருக் கொடி இறக்குதலும் அதைத் தொடா்ந்து தான தா்மங்களும் நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தா்மகா்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோா் செய்துவருகின்றனா்.

Tags:    

Similar News