உள்ளூர் செய்திகள்

குமரியில் பரவலாக மழை சுருளோட்டில் 80.6 மில்லி மீட்டர் பதிவு

Published On 2023-05-10 07:01 GMT   |   Update On 2023-05-10 07:01 GMT
  • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருந்தது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுருளோடு பகுதியில் மதியத்திற்கு பிறகு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 80.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

பூதப்பாண்டி, நாகர்கோவில், அடையாமடை, கொட்டாரம், கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மலையோர பகுதிகளி லும், அணை பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 38.07 அடி யாக இருந்தது. அணைக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.45 அடியாக உள்ளது. அணைக்கு 437 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 38.07, பெருஞ்சாணி 58.4, சிற்றாறு 1 -2, பூதப்பாண்டி 10.4, கன்னிமார் 9.4, கொட்டாரம் 17.4, நாகர்கோவில் 17.2, சுருளோடு 80.6, தக்கலை 3, மாம்பழத்துறையாறு 26.6, பாலமோர் 36.2, அடையா மடை 3, குருந்தன்கோடு 7, ஆணைக்கிடங்கு 23.2, முக்கடல் 20.2.

Tags:    

Similar News