உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் வடக்கு வாசல் மயான சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-07-10 07:23 GMT   |   Update On 2022-07-10 07:23 GMT
  • கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது
  • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் பக்தர்கள் பொதுமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடக்கு வாசலில் மயான சுடலை மாட சுவாமி கோவில் அமைந்து உள்ளது.

இந்தக் கோவிலில் ஜீர னோத்தாரண சாஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா 14-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும் புண்யாக வாஜனமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 8 மணிக்கு பரிகார பூஜைகள் நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை7 மணிக்கு மங்கள இசையும் 7.30 மணிக்கு பிராயசித்த பூஜைகள் ஆரம்ப நிகழ்ச்சி யும் நடக்கிறது. 8 மணிக்கு கலச பூஜை மற்றும் ஹோ மங்கள் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து கணியான் கூத்து மகுட கச்சேரி நடக்கிறது. 9 மணிக்கு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது. 10 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் களபம்சார்த்துதல் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு ஊட்டுப்படையல் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்து பூஜை, பிரவேச பலி போன்றவை நடக்கிறது. 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்யாக வாஜனம்நடக்கிறது.6-30 மணிக்கு எஜமான சங்கல்பம் ஆச்சார்ய வர்ணம், கும்ப அலங்காரம் கலாஹர்ஷனம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி யாக சாலை பூஜை எழுந்தருளல் நிகழ்ச்சியும் 7.30 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் 8.30 மணிக்கு திரவியாகுதியும் தீபாராதனையும் நடக்கிறது. 9 மணிக்குஅருட்பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

13-ந்தேதி காலை 6.30 மணிக்கு மங்கள இசையும் 7.30 மணிக்குவிக்னேஸ் வரபூஜை மற்றும் புண்யாக வாஜனம் நடக்கிறது. 8 மணிக்கு வேத பாராயணமும் 9 மணிக்கு இரண்டாம்காலயாகசாலை பூஜைகள் ஆரம்பமும் நடக்கிறது. 10.30 மணிக்கு திரவியாகுதி, வஸ்திராகுதி, பூர்ணாகுதி, போன்ற பூஜை களும் பகல் 11 மணிக்கு தீபா ராதனை மற்றும் அருட்பிர சாதம் வழங்குதலும் நடக் கிறது. மாலை5 மணிக்கு மங்கள இசையும் 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்யாக வாஜனமும் நடக்கிறது. 6.30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆரம்பமும் இரவு 8 மணிக்கு திரவியாகுதி, வஸ்திராகுதி, பூர்ணாகுதி போன்ற பூஜைகளும் நடக்கிறது. 9.30 மணிக்கு தீபாராதனையும் 10 மணிக்கு அருட்பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

14-ந்தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையும் 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்யாக வாஜ னம் நடக்கிறது. 7 மணிக்கு நான்காம் கால யாகசால பூஜைகள் ஆரம்பமாகிறது. 7.30 மணிக்கு ஸபர்சாகுதி, நயனோன்விலனம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை போன்ற வை நடக்கிறது.பின்னர் 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மயான சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகமும் அதைத்தொடர்ந்து அபிஷே கமும் நடக்கிறது.

பகல் 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் மேலத்தெரு ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தான நிர்வாகிகள், கீழத் தெரு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் நிர்வா கிகள் வடக்கு தெரு ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் பக்தர்கள் பொதுமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News