உள்ளூர் செய்திகள்

கோட்டாரில் சரக்கு லாரிகள் மோதல்

Published On 2022-08-07 07:31 GMT   |   Update On 2022-08-07 07:31 GMT
  • பிரேக் அறுந்ததால் விபத்து
  • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.காலை முதல் இரவு வரை சரக்கு லாரிகள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இரவு முதல் அதிகாலை வரை லாரிகளில் சரக்குகள் கொண்டு வந்து இறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலையில் லாரி ஒன்று கோட்டார் பஜாருக்கு சரக்கு களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டி ருந்தது.சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் லாரி வந்து கொண்டி ருந்தபோது திடீரென பிரேக் ஒயர் அறுந்ததாக தெரிகிறது.இதனால் டிரைவரால் லாரியை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு லாரி மீது மோதியது. இதில் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. லாரி டிரைவரும் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச் சைக்காக அங்குள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிகாலை நேரத்தில் நடந்த விபத்தினால் மிகப் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

காலையில் அல்லது மாலை நேரங்களில் விபத்து நடந்திருந்தால் மிகப்பெரிய விபரிதங்கள் நடந்து இருக் கும். காலை நேரத்தில் நடந்த தால் விபத்தில் சிக்கிய லாரி மட்டுமே சேதம் அடைந்தது.

Tags:    

Similar News