உள்ளூர் செய்திகள்

வடசேரி சுப்பையார் குளத்தில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு

Published On 2023-04-24 06:22 GMT   |   Update On 2023-04-24 06:22 GMT
  • வட சேரி பகுதியில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார்.
  • இறைச்சிகள் ஆங்காங்கே வெட்டப்படுவதாக புகார்கள் வந்துள்ளது

நாகர்கோவில் :

வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள சுப்பையார்குளம் நகர்ப்புற திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணியை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து வட சேரி பகுதியில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். அந்த பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் சுப்பையார்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் அந்த பகுதியில் உள்ள கழிவு நீர்கள் பாய்ந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து சுப்பையார் குளத்தை சீரமைக்க நட வடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.

நகர்ப்புற திட்டத்தின் கீழ் தற்பொழுது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குளத்தில் உள்ள மணல்கள் எடுத்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

50 சதவீத பணிகள் தற்பொழுது நிறை வடைந்துள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் தூர்வாரும் பணி நிறை பெறும். இதைத்தொடர்ந்து குளத்தின் கரைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் இந்த குளத்தில் சுத்தமான தண்ணீர் விடுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் நகர பகுதியில் இறைச்சிகள் ஆங்காங்கே வெட்டப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பொது இடங்களில் இறைச்சிகளை வெட்டக் கூடாது. இறைச்சிகளை வெட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சிகளை வெட்ட வேண்டும். இறைச்சிகளை வெட்டுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது.

கால்நடைத்துறை அனுமதி அளித்த பிறகு அந்த இறைச்சிகளை வெட்ட முடியும். இதனை பின்பற்ற வேண்டும். பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மண்டல தலைவர் ஜவகர், மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் கலா ராணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து செட்டிகுளம் பகுதியில் மேயர் மகேஷ் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். சாலை ஓரங்களில் ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News