உள்ளூர் செய்திகள்

முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தவறி விழுந்து மெக்கானிக் பலி

Published On 2023-09-07 07:26 GMT   |   Update On 2023-09-07 07:26 GMT
  • மாலை 6 மணியளவில் படகுகள் நிற்கும் பகுதியில் அவரது உடல் மிதந்துள்ளது
  • பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும்

குளச்சல் :

நாகர்கோவில் கோட்டார் இளங்கடையை சேர்ந்தவர் தாசன். இவரது மகன் சகாய சுரேஷ் (வயது 35).

இவர் முட்டம் தனியார் மீன்பிடித் துறைமுகம் அருகில் உள்ள ஒரு மரைன் சர்வீஸ் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.பிணமாக மிதந்தார்திருமண மாகாத சகாய சுரேஷ், சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் படகுகள் நிற்கும் பகுதியில் அவரது உடல் மிதந்துள்ளது. இதனை பார்த்த துறைமுக காவலர் சந்திரன், குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சகாய சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் சகாய சுரேசுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததும், அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், விசைப்படகுகளில் வேலைக்கு சென்ற நேரத்தில் வலிப்பு வந்து தவறி கடலில் விழுந்ததில் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News