வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
- கன்னியாகுமரிக்கு நாளை வருகை
- நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்தையும் பார்வையிடுகிறார்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முத்துராமன், செல்வக்குமார், அகஸ்டினா கோகிலவாணி கவு ன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், நவீன் குமார், சேகர்,அனிலா சுகுமாறன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாக ர்கோவில் மாநகராட்சி வார்டுக்கு உட்ப ட்ட பகுதியில் பகுதி சபா கூட்டம் நடத்தி பொது மக்களிடமிருந்து குறைகள் கேட்க ப்படுகிறது.
அதன் அடிப்படையில் நாளை 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடக்கிறது. இந்த பகுதி சபா கூட்டமானது 3 மாதத்திற்கு ஒருமுறை வார்டு பகுதிகளில் நடத்தப்படும். மேலும் நாளைமறுநாள் 2-ந் தேதி மாநகர சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
நாகர்கோவில் பெருவிளையில் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதைத் தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு பணியை மேற்கொள்கிறார் .
பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே. என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதை தொடர்ந்து மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கே.என்.நேரு நாளை 1-ந் தேதி தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வருகிறார்.
பின்னர் மாலை கன்னியாகுமரி வருகை தரும் அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சாலை சீரமைப்புக்குரூ.30 கோடி நிதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு மிகவும் பழுதான சாலைகள் முதல் கட்டமாக சீரமைக்கப்படும் என்று மேயர் மகேஷ் தெரிவித்தார்.