உள்ளூர் செய்திகள்

முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2023-09-02 07:42 GMT   |   Update On 2023-09-02 07:42 GMT
  • ஏராளமான பங்கு மக்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  • விழா ஏற்பாடுகளை பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

தக்கலை :

முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கேரளா மாநிலம் சுல்தான் பேட்டை மறை மாவட்ட ஆயர் அபீர் தலைமையில் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றப் பட்டது. நிகழ்ச்சிக்கு ஆலய அதிபர் டோமினிக் கடாட்ச தாஸ், இணை அதிபர் ஜேம்ஸ், முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், அருட்ப ணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

விழாவில் இந்து மதத்தை சேர்ந்த பால்மணி உள்ளிட்டோரும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த திருவிதாங் கோடு ஜமாத் செயலாளர் டாக்டர் யூசுப் உள்ளிட்டோரும் மற்றும் ஏராளமான பங்கு மக்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவானது வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி மறையுரை போன்றவை நடக்கிறது. நாளை (3-ந்தேதி) காலை 11 மணிக்கு பல்லாயிரம் பேர் பங்கேற்கும் சமபந்தி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News