உள்ளூர் செய்திகள்

குமரியில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஜூன் 15-ந்தேதி வரை நடக்கிறது

Published On 2023-05-03 08:32 GMT   |   Update On 2023-05-03 08:32 GMT
  • மக்களின் தரத்தை மேம்படுத் துவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  • முழு சுகாதாரமான, பசுமையான மாவட்டமாக மாற்றிட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாகர்கோவில் :

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது குறித்து துறைசார்ந்த அலுவலர்க ளுடனான கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது கூறியதாவது:-

நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரசாரமானது குமரி மாவட்டத்தில் மே மாதம் முதல் ஜூன் 15-ந் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் நடைபெற வுள்ளது. பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதோடு, சுகாதாரம், உற்பத்திதிறன், பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் தரத்தை மேம்படுத் துவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைக்க வேண்டும். மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ள நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, குமரி மாவட்டத்தை முழு சுகாதாரமான, பசுமையான மாவட்டமாக மாற்றிட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன், உதவி இயக்குனர் (ஊராட்சி) கள்) சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News