உள்ளூர் செய்திகள்

கொட்டில்பாட்டில் கடலரிப்பை தடுக்க மணல் மூடைகளை அடுக்க மணல் ஆலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

Published On 2022-07-09 08:07 GMT   |   Update On 2022-07-09 08:07 GMT
  • கொட்டில்பாட்டில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலரிப்பு
  • சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது.

இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடலரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது.அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது.மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது.

தொடர்ந்து ஏற்படும் கடலரிப்பிலிருந்து வீடு களை பாதுகாக்க அங்கு தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்க வேண்டும் என மீனவர் கள் வலியுறுத்தினர். இதை யடுத்து குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மணவாளக்குறிச்சி மணல் ஆலை நிறுவன அதிகாரிகளிடம் மணல் மூடைக்கு தேவையான மணல் வழங்குமாறு பேச்சு வார்த்தை நடத்தினார்.தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. கொட்டில்பாட்டில் கடலரிப்பு ஏற்பட்ட பகுதி களை பார்வையிட்டார்.

இதில் மணல் ஆலை நிறுவன கனிமம் பிரிவு முதன்மை மேலாளர் சிவராஜ், துணை பொது மேலாளர் ஜெயச்சந்திரன், பங்குத்தந்தை ராஜ், கவுன்சிலர் பனிக்குருசு, மாநில காங்.செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், முன்னாள் ராணுவ வீரர் சுதன் ஆகியோர் உடனிருந்தனர்.தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ.கடலரிப்பில் பாதிக்கப் பட்ட சிங்கார வேலர் காலனி பகுதியையும் பார்வையிட்டு சென்றார்.

Tags:    

Similar News