உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகள் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட கல்வியால் மட்டுமே முடியும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2023-02-02 07:39 GMT   |   Update On 2023-02-02 07:39 GMT
  • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங் கேற்று புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்
  • புதிய வகுப்பறை கட்டிட வசதியை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கல்வியை பெற முடியும். நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், வீட்டு க்கும் பெருமை சேர்க்க வேண்டும்

நாகர்கோவில் :

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், தேரூர் பேரூராட்சி - தேவகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைக் கட்டி டம் மற்றும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங் கேற்று புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

இப்பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் தற்போது உயர்ந்த நிலையில் உள்ளார்கள். மாணவர் களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது கல்வியாகும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்கள் குழந்தைகளை கல்வி பயில செய்வது பெற்றோ ரின் மிக முக்கியமான கடமையாகும்.

போட்டிகள் நிறைந்த உலகில் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட கல்வியால் மட்டுமே முடியும். கஷ்டப் பட்டு படித்தவர்கள் இன்றைய உலகில் உயர்ந்த நிலையில் உள்ளார்கள்.

மாணவர்கள் இந்த புதிய வகுப்பறை கட்டிட வசதியை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கல்வியை பெற முடியும். நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், வீட்டு க்கும் பெருமை சேர்க்க வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலா ளர் ஜெஸீம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அழகேசன், மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி ஸ்ரீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News