உள்ளூர் செய்திகள்

குளச்சல் துறைமுக பாலத்தின் அஸ்திவாரம் பகுதி சேதம் - கொட்டில் பாட்டில் மீன் ஏலக்கூடம் சேதம்

Published On 2022-07-20 06:44 GMT   |   Update On 2022-07-20 06:44 GMT
  • சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
  • கடந்த 5 நாட்களாக ராட்சச அலைகள் எழுந்து மணல் பரப்பு முழுவதையும் மூழ்கடித்து உள்ளது

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் பலத்த காற்று வீசியதால் ராட்சத அலைகள் எழும்பின. இதனால் வள்ளம் கட்டுமரம் மீனவர் கள் அதிகமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

குளச்சல் கடற்கரையில் பழைய பாலம் ஒன்று உள்ளது. இதனை கண்டு களிக்கவும், கடற்கரையின் அழகை ரசிக்கவும் சூரியன் மறையும் காட்சியையும் கண்டுகளிக்க சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

தற்போது குளச்சல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுவதால் கடல் அழகை ரசிக்க வரும் பொது மக்கள் கடற்கரையில் உட்கார முடியாமல் தவித்தனர். கடந்த 5 நாட்களாக ராட்சச அலைகள் எழுந்து மணல் பரப்பு முழுவதையும் மூழ்கடித்து உள்ளது இதனால். மாலை வேளை களில் பொழுதை கழிக்க கடற்கரைக்கு வரும் மக்கள் மணல் பரப்பில் அமர முடியாமல் திரும்பி சென்றனர்.

குளச்சல் துறைமுக பாலம் அடி பகுதியில் கடல் அரிப் பால் மணல் இழுத்து செல்லபட்டு பாலத்தின் தூண்கள் அஸ்திவாரம் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. ராட்சத அலையால் கடற்கரையின் மணல் பரப்பு முழுவதையும் கடல்நீர் ஆக்கிரமித்துள்ளது.

தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோல் கொட்டில் பாட்டிலும் கடலரிப்பு ஏற்பட்டு மணற்பரப்பில் கட்டப்பட்டிருந்த மீன் ஏலம் கூடம் கட்டிடம் சேதமடைந்து அஸ்திவாரத்தில் அடியில் மணல் பரப்பு அடித்து செல் லப்பட்டதால் அஸ்திவாரம், கான்கிரீட் உடைந்து கட்டிடம் கடலில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏல கூடத்தின் அஸ்தி வாரம் இடிந்து சரிந்து காணப்படுகிறது.

ஆபத்தான நிலையில் உள்ள இந்த மீன் ஏல கூடத்தை இடித்து மாற்றம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News