குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பு
- பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி
- பஸ், ரெயில் நிலையங்களிலும் சோதனை
நாகர்கோவில்:
கோவை, சேலம், மதுரையை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பாரதிய ஜனதா ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்புகள், தலைவர்கள் சிலைகள், பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று இரவு விடிய விடிய போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இரண்டு ஷிப்டுகளாக கண்காணிப்பு பணி நடந்தது.நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
இன்று 2-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயிலில் வரும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ெரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
கன்னியாகுமரி, வள்ளி யூர், இரணியல், நாங்குநேரி, குழித்துறை ரெயில் நிலை யத்திலும் பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவில், மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அரசு அலுவலகங்களி லும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொது மக்கள் அனைவரும் பரிசோ தனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பொதுமக்கள் கொண்டு வந்த பேக்குகள் முழுமை யாக சோதனை செய்யப்பட் டது.
ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களிலும் போலீசார் போலீஸ் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங் களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் 1200 போலீ சார் ஈடுபட்டுள்ளனர்
பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் பலப்படுத்தப்பட் டுள்ள நிலையில் பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.