உள்ளூர் செய்திகள்

சர்வதேச தடகள போட்டியில் குமரியை சேர்ந்த பெண் போலீஸ் மேலும் 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை

Published On 2022-07-28 07:19 GMT   |   Update On 2022-07-28 07:19 GMT
  • கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 3 முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்) ஆகிய தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • தடகள போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில்:

சர்வதேச அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் எட்டாக பணியாற்றி வரும் கிருஷ்ண ரேகா என்பவரும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த 25-ந் தேதி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இந்த நிலையில் நேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 3 முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்) ஆகிய தடகள போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற கிருஷ்ண ரேகா 2 போட்டிகளிலும் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். தங்க பதக்கம் வென்ற தகவல் அறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உடன டியாக கிருஷ்ண ரேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த வெற்றியானது குமரி மாவட்ட காவல் துறைக்கு பெருமையை சேர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News