உள்ளூர் செய்திகள்

குமரியில் மழை நீடிப்பு

Published On 2023-07-09 06:42 GMT   |   Update On 2023-07-09 06:42 GMT
  • திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
  • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 30 அடியை எட்டியது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் நேற்றும் சாரல் மழை பெய்தது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து ஆனந்த குளியலிட்டு சென்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 36 அடியை எட்டியது. அணைக்கு 627 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 646 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 11 அடி உயர்ந்திருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 30 அடியை எட்டியது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 1 மைனஸ் 15.10 அடியாக உள்ளது.

Tags:    

Similar News