உள்ளூர் செய்திகள்

வடசேரி சுப்பையார் குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-07-23 07:10 GMT   |   Update On 2022-07-23 07:10 GMT
  • வடசேரி சுப்பையார் குளத்தில் நேற்று தூர் வாரும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
  • சுமார் 30-க்கு மேற்பட்ட வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள்

நாகர்கோவில் :

நாகர்கோவில் வடசேரி சுப்பையார் குளத்தில் நேற்று தூர் வாரும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது நடந்த நிகழ்ச்சி யில் ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது சுப்பையார் குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற ஆணையர் ஆனந்த மோகன் உத்தர விட்டார். இன்று காலை சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் சுப்பையார்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கட்டப்பட்டிருந்த கூரைகள், தகர சீட்டுகள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. சுமார் 30-க்கு மேற்பட்ட வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வடசேரி போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News