உள்ளூர் செய்திகள்

உண்டனாக்குழி -குழித்துறை சாலை ரூ.36 லட்சத்தில் சீரமைப்பு - நகர்மன்றத் தலைவர் பொன்.ஆசைதம்பி தொடங்கி வைத்தார்

Published On 2022-07-26 08:02 GMT   |   Update On 2022-07-26 08:02 GMT
  • கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது 3 இடங்களில் அரிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டது
  • 15 வது குழு மானிய நிதி குழு திட்டத்தில் 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது

கன்னியாகுமரி:

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட குழித்துறை திருத்துவபுரம் உண்டனாக்குழியிலிருந்து கல்பாலத்தடி வரை நெய்யாறு இடது கரை சானலை தொட்டு ரோடு உள்ளது. மெயின் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் போது கார் மற்றும் பைக்கில் இந்த ரோடு வழியாக ஏராளமானோர் செல்வது வழக்கம். இந்த ரோடு கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது 3 இடங்களில் அரிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டது. இந்த ரோட்டை முழுமையாக தார் போட்டு சீரமைக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் ஜெயந்தி, நகராட்சி துணைத்தலைவர் பிரபின் ராஜா ஆகியோர் குழித்துறை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறையின் அனுமதி பெற்று 15 வது குழு மானிய நிதி குழு திட்டத்தில் 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 3 இடங்களில் கான்கிரீட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு தார் போட்டு சீரமைக்கும் பணி துவங்கியது. இதற்கான பணியை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். கவுன்சிலர்கள் ஜெயந்தி, ரத்தினமணி, விஜீ, என்ஜினியர் பேரின்பம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News