உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் - மக்கள் குறை தீர்க்கும் முகாமில் த.மா.கா.மனு

Published On 2022-07-25 09:20 GMT   |   Update On 2022-07-25 09:20 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
  • மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வு என்ற தமிழக அரசின் அறிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது

நாகர்கோவில் :

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. செயலாளர் டி.ஆர்.செல்வம் பொருளாளர் டாக்டர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் தற்போது தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த மூன்று, நான்கு வருடமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில், குறு தொழில்கள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் நசிந்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் வீட்டுவரி, சொத்துவரியை உயர்த்தியது. தொடர்ந்து ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வு என்ற தமிழக அரசின் அறிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது. ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசு ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற அறிவிப்பினை உடனே திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாநகரத் தலைவர் சேகர் துணைத்தலைவர்கள் பொன் மாதவன்,செல்வி விலாஸ் குமார், வட்டாரத் தலைவர்கள் லீனஸ்,சேகர், நாஞ்சில் முருகன், அருள்,ரூபன் ,மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ் ,பிரபா, அஸ்வின் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News