உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றிவந்த 2 லாரிகளுக்கு ரூ.97 ஆயிரம் அபராதம் - போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2022-11-17 08:43 GMT   |   Update On 2022-11-17 08:43 GMT
  • லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் ரோடுகள் பழுதடைந்து மோசமாக இருக்கிறது. இந்த லாரிகளில் அதிக வேகத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது
  • 2 கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றி குலசேகரம் வழியாக கேரளாவுக்கு போகும்போது குலசேகரம் போலீசார் அரச மூட்டில் வைத்து மடக்கிபிடித்து எடை போட்டார்கள்

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேராளவுக்கு அதிக அளவில் எம்.சான்ட், என். சான்ட், ஜல்லி, கல் போன்றவைகள் ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் கேராளவுக்கு செல்கிறது.

சித்திரங்கோடு அருகில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தினமும் நூறுக்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றி இரவு நேரங்களில் செல்கிறது. கேராளவுக்கு களியாக்கவிளை வழி யாகவும் களியல், நெட்டா வழியாகவும் லாரிகள் செல்கிறது.

இந்த லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் ரோடுகள் பழுதடைந்து மோசமாக இருக்கிறது. இந்த லாரிகளில் அதிக வேகத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்தும் தினமும் 500-க் கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு லோடு ஏற்றி கொண்டு செல்கிறார்கள். இதனால் உள்ளூரில் உள்ளவர்களுக்கு வீடு கட்டிடம் கட்டுவதற்கு கட்டுமான பொருள்கள் கிடைப்பது இல்லை. அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை உள்ளது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதேபோல் நேற்று இரவு 2 கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றி குலசேகரம் வழியாக கேரளாவுக்கு போகும்போது குலசேகரம் போலீசார் அரச மூட்டில் வைத்து மடக்கிபிடித்து எடை போட்டார்கள் அதில் அரசு நிர்ணயித்த எடையை விட கூடுதலாக அதிக எடை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் 2 லாரிகளுக்கும் ரூ. 97 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

குலசேகரம் போலீ சாரின் இந்த அதிரடி நட வடிக்கையால் அதன் பிறகு பின்னால் வரவேண்டிய வாகனங்கள் எதுவும் வரவில்லை.

Tags:    

Similar News