வயது முதிர்ந்த பெற்றோரை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்
- ஆயர் மார் ஜார்ஜ் ராேஜந்திரன் அறிவுரை
- முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் சான்றிதழ்கள் வழங்கினர்
கன்னியாகுமரி :
கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் வரவேற்பு நடனமாக மாணவிகளின் பரத நாட்டியம் ஆடினர். கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக்கேல் ஆரோக்கியசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்களை கவனிக்க வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி கொண்டி ருக்கின்றன. மாணவர்க ளாகிய உங்கள் வளர்ச்சியில் உங்கள் பெற்றோர்களை உங்களுக்கு உறுதுணை யாகவும், உதவியாகவும் இருக்கிறார்கள். உங்கள் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பை எப்போதும் மறந்து விடாதீர்கள். திருமறையானது வயதான காலத்தில் உனது தாய் தந்தையரை பாதுகாப்பது உனக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை தரும் என்று கூறுகிறது. ஆகவே மாணவர்கள் உங்கள் பெற்றோரை அவர்களது வயதான காலத்தில் பாதுகாத்து கொள்ளுங்கள் என கூறினார்.
பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், குமரித்தோழன் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட டி.வி. புகழ் பாலா மற்றும் வினோத் ஆகியோரின் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் குமரித்தோழன் மாணவ,மாணவிகள் எப்படி இருக்க வேண்டும்? அவர்களது இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? இங்கிருந்து மாணவர்களாகிய நீங்கள் வெளியே செல்லும்போது இந்த சமூகத்திற்கு என்ன நன்மையை செய்யப்போகி றோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என பேசினார்.
தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பவுத்துபறம்பில் சிறப்புரையாற்றும் போது வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அந்த வாழ்க்கையை பிறருக்கு பயன்பட வாழ வேண்டும் என்று பேசினார்.
கல்லூரி துணை முதல்வர் சிவனேசன் நன்றி கூறினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.