உள்ளூர் செய்திகள்

கொட்டில்பாட்டில் திடீர் கடல் சீற்றம்

Published On 2022-08-16 09:20 GMT   |   Update On 2022-08-16 09:20 GMT
  • தூண்டில் வளைவு உடைந்து சேதம்
  • வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பதட்டம்

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதியான அரபிக் கடல் பகுதியில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் கடல் சீற்றமாக இருந்தது. இந்த நிலை மாறி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இருப்பினும் அவ்வப்போது கடலில் சீற்றம் இருந்தே வந்தது.

இதனால் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு பகுதியில் கடல் திடீரென சீற்றமாக காணப்பட்டது. அலைகள் பயங்கரமாக சீறிப் பாய்ந்தன.

ராட்சத கடல் அலைகள் எழும்பி, தூண்டில் வளைவு மீது பயங்கரமாக மோதியது. இதன் காரணமாக தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்தது. மேலும் கடல் நீர் அதிகமாக வெளியேறி, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது.

இதனால் அங்கு வசித்த வர்கள் பாதுகாப்பு காரண மாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சிலர் தங்கள் உறவினர் வீடு களுக்குச் சென்று தங்கினர். இதில் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அவற்றை பெண்கள் அப்பு றப்ப டுத்தினர். இதனால் ெகாட்டில் பாடு மீனவர் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News