உள்ளூர் செய்திகள்

ரோகிணி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

Published On 2023-08-13 07:21 GMT   |   Update On 2023-08-13 07:21 GMT
  • மாணவர்களுக்கான சாகர்-23 என்ற தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
  • ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாகர்கோவில் :

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான சாகர்-23 என்ற தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகரும், சிறந்த ஊக்க மூட்டும் பேச்சாளருமான டாக்டர்.தாமு கலந்து கொண்டு "நான் ஒரு சாம்பியன்" என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே கருத்துரை வழங்கினார்.

மாணவர்கள் கல்வியில் உயர் நிலைமையை அடை வதற்கான வழிமுறைகளை அவருடைய வாழ்க்கை மற்றும் திறமைகளின் மூல மாக தாமு பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் தங்க ளின் பெற்றோர்க ளுக்கும், பேராசிரி யர்களுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஆசிரி யர்களுக்கு நன்றி பாராட்ட வைத்தார்.

முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மது சுரேஷ் மாண வர்களுக்கு இதற்கு முன் நடத்தப்பட்ட கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை விழிப்புணர்வு பேரணிகள் ஆகியவற்றை பற்றி தொழில்நுட்ப கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் கல்லூரி அளவில் 1 முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிற பொறியியல் கல்லூரி மாணவர்களும் பல போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர். பின்னர் ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணிதத்துறை தலைவர் டாக்டர் மது சுரேஷ், ஆங்கிலத்துறை தலைவர் டாக்டர் வரத ராஜன், வேதியியல் துறை தலைவர் டாக்டர் ராதிகா, இயற்பியல் துறை தலைவர் டாக்டர் ஜெஸி பயஸ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News