உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

புதுக்கடையில் அனுமதியின்றி மண் கடத்திய டெம்போ பறிமுதல்

Published On 2022-11-10 07:56 GMT   |   Update On 2022-11-10 07:56 GMT
  • புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது.
  • புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் அரசு அனுமதியின்றி அதிக அளவில் மண் கடத்துவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவ இடத்தை பத்மநாபபுரம் சப்- கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அனுமதியின்றி மண் கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின் பேரில் நேற்று புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது பெரிய பள்ளி தெருவில் எந்த வித அரசு அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் மண் கடத்திய டெம்போ ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு யூனிட் மண் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. போலீசார் மண் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து, டெம்போ ஓட்டுநர் பைங்குளம் பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 56) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News