இலங்கையில் உளவு கப்பல்கள் வருவதை முன்கூட்டியே தடுக்க வேண்டும்
- மத்திய அரசுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- இலங்கையில் நிறுத்தப்படுகின்ற சீன உளவு கப்பல்களால் தமிழகத்தை சேர்ந்த தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
இந்தியா தனது 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடிய நேரத்தில் இந்திய எல்கைக்கு அருகில் காரகோரம் மலைப்பகுதியில் உள்ள சமதள பகுதி யில் சீன ராணுவம் போர் ஒத்திகை செய்யும் காட்சிகள் அங்குள்ள தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைகோள் ஆய்வு பணி என்று பதிவு செய்யப்பட்டுள்ள உளவுக்கப்பல் இலங் கையில் உள்ள அம்பாந் தோட்டைதுறை முகத்தில் வந்து நங்கூரமிடப்பட்டது. இலங்கைக்கு மிக அருகில் உள்ள குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள், இயற்கை வளங்கள், அணைகள், அரியவகை மணல்களை பிரித்தெடுக்கும் மணவா ளக்குறிச்சி மணல் ஆலை உள்ளது.
இதைப்போன்று நெல்லை மாவட்டத்தில் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணத்தில் அமைய இருக்கும் ராக்கெட் தளம் போன்றவை அமைந்துள்ளன.
இலங்கையில் நிறுத்தப்படுகின்ற சீன உளவு கப்பல்களால் தமிழகத்தை சேர்ந்த தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு எதிர்காலங் களில் முறையாக திட்டமிட்டு, அண்டை நாடான இலங்கையில் இதுபோன்ற உளவுக் கப்பல்கள் வருவதை தடுப்பதற்கு முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் தளவாய்சுந்தரம் மனு அனுப்பியுள்ளார்.