உள்ளூர் செய்திகள்

லெமூர் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2023-07-10 06:34 GMT   |   Update On 2023-07-10 06:34 GMT
  • கடல் சீற்றம் அதிகரிப்பு காரணமாக நடவடிக்கை
  • அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பரபரப்பு

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் வழக்க மாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.

அதன்படி தற்போது ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதி கடும் சீற்றமாக உள்ளது. இதன் காரணமாக மீனவ கிராமங்களில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். கடல் சீற்றம் காரணமாக வேகமாக வரும் அலைகள், அவர்களது வீடுகள் வரை வருவது தான் அச்சத்திற்கு காரணமாக உள்ளது.

இந்த சூழலில் சுற்றுலா வாக கடற்கரைகளுக்கு வரும் மக்களும் கடல் சீற்றத்தால் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கன்னியாகுமரி, சொத்த விளை, குளச்சல், கணபதிபுரம் லெமூர் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் அதிக அளவில் வருவது வழக்கம். அதன்படி விடுமுறை நாளான நேற்று ஏராளமானோர் குடும்பத்துடன் கடற்கரை பகுதிகளுக்கு வந்தனர். இதில் லெமூர் கடற்கரைக்கு வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி யது. அங்கு கடல் சீற்றம் காரண மாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கணபதிபுரம் பஞ்சாயத்து சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்தில் குடும்பத்துடன் ெலமூர் கடற்கரை வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சீற்றம் காரணமாக கடலில் நீராடவும், கால் நனைக்கவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள தாக அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News