உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் காத்திருப்பு

Published On 2023-03-12 06:46 GMT   |   Update On 2023-03-12 06:46 GMT
  • 2 படகுகள் மட்டும் இயக்கப்படுவதால் காலதாமதம்
  • வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக் கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணஏராளமான சுற்றுலா பயணிகள் குவி ந்து இருந்தனர்.

கன்னியாகுமரி கடலில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தேஏராள மான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணி யில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்துதொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டு வந்தனர். சுற்றுலாபயணி கள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

அதேபோல திருவள்ளு வர் சிலையையும் சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் காத்திருந்து படகில்சென்று பார்வையிட்டுவந்தனர். பொதிகை படகுகரையேற்ற ப்பட்டு சீரமைக்கும்பணி நடந்து வருவதால் வேகா னந்தா, குகன் ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுவதால் தான் இந்த காலதாமத த்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங் காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட் டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது

Tags:    

Similar News